COVID-19: சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் சிங்கப்பூர் வந்த பயணிகள்..!

COVID-19 தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுற்றுலாவிற்காகத் தமிழகம் வந்த சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஏப்ரல் 30 வரை எங்கள் சர்வதேச விமானங்கள் இயங்காது: இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு

தற்போது அவர்களை அவரவர் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை விமான நிலையத்தில் இருந்து 103 பெண்கள், 30 சிறுவர், சிறுமிகள், 5 கைக்குழந்தைகள் உள்பட 268 பேர் விமானத்தில் சிங்கப்பூர் அனுப்பி (ஏப்ரல் 10) வைக்கப்பட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் சிக்கித் தவித்த மலேசிய நாட்டைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் சிறப்பு விமானம் மூலம் மலேசியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்களின் சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை நாங்கள் கவனித்துக் கொள்வோம் – பிரதமர் லீ..!