கொரோனா வைரஸ்: சிங்கப்பூர் வரும் இந்தியர்களுக்கு மத்திய அரசின் அறிவிப்பு..!

கொரோனா வைரஸ் பரவிவரும் இந்த சூழலில் அதன் அச்சுறுத்தல் காரணமாக அவசியமில்லாமல் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து மத்திய அமைச்சரவைச் செயலர் ராஜீவ் கௌபா தலைமையில் உயர்நிலைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் COVID-19 பாதிக்கப்பட்ட 3 புதிய நபர்கள் உறுதி..!

இதில், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நிலைமையைக் கண்காணித்தல், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தயார் நிலை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், விமான நிலையங்களில் பயணிகள் கண்காணிக்கப்படுவது, வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்துவது தொடர்பான முடிவுகளும் எடுக்கப்பட்டன.

இந்திய நாட்டின் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அவசியமற்ற சிங்கப்பூர் பயணத்தைத் தவிர்க்குமாறு குடிமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது'” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் திங்கள்கிழமை முதல் காத்மண்டு, இந்தோனேஷியா, வியட்நாம் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளும் விமான நிலையங்களில் பரிசோதிக்கப்படுவது குறித்து விரிவான ஆய்வுக்குப் பிறகு தற்போது திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சட்டவிரோதமாக வெளிநாட்டு தொழிலாளர்களை சிங்கப்பூருக்குள் அழைத்து வந்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு..!