கொரோனா வைரஸ் பாதிப்பு – சென்னை விமானநிலையத்தில் கண்காணிப்பு வசதிகள் இல்லை

சீனா மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலக நாடுகளே, கொரோனா வைரஸ் பீதியில் உறைந்திருக்க, தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் சென்னை உள்நாட்டு குறிப்பாக வெளிநாட்டு டெர்மினல்களில், கொரோனா வைரஸ் கண்காணிப்பு வசதி, சிறப்பு தனி வார்டு உள்ளிட்ட வசதிகள் இல்லாத நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ISRO பயிற்சி முகாமில் இணைய வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அரிய வாய்ப்பு!

கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் வருபவர்களை சோதனை செய்வது உள்ளிட்ட பல்வேறு வசதிகள், நடவடிக்கைகள், சென்னை விமானநிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், நோய்த்தொற்று உடன் வருபவர்களை சிறப்பு தனி வார்டுகளில் வைத்து கண்காணிப்பதற்கான பிரத்யேக வசதிகள் இல்லை.

கடந்த 2014ம் ஆண்டில், எபோலா வைரஸ் நோய் பரவிய போது, இன்டர்நேஷனல் டெர்மினல் பகுதியில், சிறப்பு கண்காணிப்பு, தனி வார்டு அமைப்பு கொண்ட கட்டடம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. அதற்கென இடங்களும் ஒதுக்கப்பட்டன. ஆனால், தற்போதுவரை அங்கு கட்டுமானப்பணிகள் துவங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டடம் விமான நிலையத்தில் பயணிகளுக்கானது என்றாலும்கூட அதை விமான நிலைய சுகாதார நிறுவனம் தான் நிர்வகிக்கிறது. இது வரை சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏதும் இல்லை. ஒரு வேளை யாருக்கேனும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் பொதுவான குளிர்சாதன வசதி என்பதால் அவரை நீண்ட நேரம் அவர்களை, இந்த டெர்மினலில் வைத்திருக்க முடியாது என விமானநிலைய அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு – இந்தியாவின் உதவியை நாடும் சீனா