‘கொரோனா வைரஸ் நெகட்டிவ்’ – சான்றிதழ் காட்டினால் மட்டுமே இந்தியாவிற்குள் அனுமதி

இத்தாலி மற்றும் தென் கொரியாவில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு மார்ச் 10ம் தேதி முதல் சில நிபந்தனைகளை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த இரண்டு நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அந்தந்த நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ ஆய்வகங்களில் இருந்து, கோவிட்-19 தொற்றால் எந்த பாதிப்பும் இல்லை என சான்றிதழ் பெற்று வந்தால் மட்டுமே இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

வெளிநாட்டில் இருந்து வரும் அனைவருக்கும் தீவிர பரிசோதனை: இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளால் பரவலாக கட்டுப்படுத்தப்படும் வரை இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்றும் இந்திய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதிலும் 28,529 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நாடாளுமன்றத்தில் (வியாழக்கிழமை) தெரிவித்தார்.

டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை

இன்றிலிருந்து மார்ச் 31 வரை டெல்லியில் 5ம் வகுப்பு வரை பயலும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என டெல்லியின் துணை முதல்வர் மனிஷ் சிசோதியா கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு குழந்தைகளுக்கு ஏற்படாமல் தடுக்கவே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மணிநேரத்தில் 40 விமானங்களை கையாளும் திறன் – ‘வாவ்’ ஸ்டேட்டஸ் பெறும் சென்னை விமான நிலையம்