இந்தியாவில் மூன்றாவது கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று பாதிப்பும் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதித்த குழந்தை – தனி கண்ணாடி அறையில் வைத்து சிகிச்சை (வீடியோ)
சீனாவின் வுஹான் நகரை மையமாக வைத்து பரவி வரும் கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரள வைத்து வருகிறது. இதுவரை 20 நாடுகளில் பரவியுள்ள கரோனா வைரஸுக்கு 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே கேரளாவில் இருந்து ஏராளமான மாணவர்கள் சீனாவின் வுஹான் நகரில் தங்கிப் படித்து வந்தனர். அவர்கள் முதல் கட்டமாக ஏர் இந்தியா விமானம் மூலம் அழைத்த வரப்பட்டனர். இதில் கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு மருத்துவச் சோதனை நடத்தியதில் அவருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் திருச்சூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் சீனாவில் இருந்து திரும்பிய கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததையடுத்து, அவரும் ஆழப்புலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருப்பது உறுதியானது. இதை, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஷைலஜா இச்செய்தியை உறுதி செய்துள்ளார்.
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், அதனை மாநில பேரிடராக முதல்வர் பினராயி விஜயன் இன்று அறிவித்துள்ளார்.
Corona Virus : பலியானவர்களின் எண்ணிக்கை 361ஆக அதிகரிப்பு; 478 பேர் சீரியஸ்