கொரோனா பரவாமல் தடுக்க மக்கள் கைக்குலுக்குவதை தவிர்க்குமாறும் அதற்கு பதிலாக ‘நமஸ்தே’ கூறும் இந்தியர்கள் வழியை பின்பற்றலாம் எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவுறுத்தியுள்ளார்.
சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலகெங்கும் பரவி வருகிறது. இதுவரை 67 நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க, அதிகளவில் மக்கள் கூட வேண்டாம் எனவும், கைக்குலுக்குவதோ, முத்தமிடுவதோ கூடாது உள்ளிட்ட பல்வேறு தற்காப்பு செயல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.
‘கொரோனா வைரஸ் நெகட்டிவ்’ – சான்றிதழ் காட்டினால் மட்டுமே இந்தியாவிற்குள் அனுமதி
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கைக்குலுக்குவதற்கு பதிலாக இந்தியர்களின் வழியை பின்பற்றலாம் என அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா பரவாமல் தடுப்பது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் நெதன்யாகு கூறுகையில், இஸ்ரேலில் நோய் பரவுவதை தடுக்க, நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவது, விமான கொள்கைகள் உள்ளிட்டவற்றில் நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்களை வாழ்த்தும்போது சாதாரண கைகுலுக்கலைத் தவிர்ப்பது போன்ற சில எளிய நடவடிக்கைகளும் மாற்றப்படலாம். அதாவது வாழ்த்தும் போது அல்லது வரவேற்கும் போது இந்தியர்களை போல ‘நமஸ்தே’ வழியை பின்பற்றலாம், எனக்கூறிய அவர், ‘நமஸ்தே’ செய்வது எப்படி என்பதையும் செய்தியாளர்களுக்கு மத்தியில் செய்து காண்பித்தார்.
ஒரு மணிநேரத்தில் 40 விமானங்களை கையாளும் திறன் – ‘வாவ்’ ஸ்டேட்டஸ் பெறும் சென்னை விமான நிலையம்