Corona : வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப செய்ய வேண்டியது என்ன?

கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 81 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களால் தான் கொரோனா தொற்று இந்தியாவில் ஏற்படுகிறது. இதனால், மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எட்டு நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு முற்றிலுமாக விசா நடைமுறைகளை ரத்து செய்துவிட்டது.

அதேசமயம், இந்த எட்டு நாடுகள் தவிர்த்து, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு மாதத்துக்கு விசா வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் இந்த புதிய நடவடிக்கை அமலுக்கு வந்துள்ளது. அடுத்த மாதம் ஏப்ரல் 15 வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.

Corona Virus: விசா வழங்குவதை இந்தியா தடை செய்த நாடுகளின் பட்டியல்

மத்திய அரசின் திட்டப்படி வெளிநாடுகளில் இருந்து இந்தியா வர யாரும் விசா பெற முடியாது. ஆனால் அத்தியாவசிய மற்றும் அரசுப் பணிகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தூதர்கள், சர்வதேச அமைப்புகளில் பணிபுரிபவர்கள், வேலைவாய்ப்பு திட்டங்களில் தொடர்புடையவர்களுக்கு விசா அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தியாவுக்கு வந்தே தீர வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள், தங்கள் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த நாட்டின் சுகாதாரத்துறையிடம் இருந்து பெறப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனை ஆவணங்கள் சமர்ப்பித்து அனுமதி கேட்கலாம். ஆனால், தூதரகத்தின் முடிவைப் பொறுத்தே அவர்களுக்கு விசா வழங்கப்படும்.

தடை செய்யப்பட்ட எட்டு நாடுகளைத் தவிர மற்ற நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியா வர முடியும். ஆனால், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லாவிட்டாலும் கூட, அவரவர்கள் வீட்டில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்களை அரசு தொடர்ந்து கண்காணிக்கும். 14 நாட்களுக்கு பிறகே இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.

இந்தியா சென்று ஒருவாரத்தில் திரும்பிவிடலாம் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் இந்தியா செல்லாமல் இருப்பது நல்லது. ஏனெனில், 14 நாட்கள் கழித்தே அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுவார்.

Corona Virus – வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் உட்பட அனைவருக்கும் இந்தியா நுழைய தடை