தமிழகத்தில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

First Corona Virus in Tamil Nadu

தமிழகத்தில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கோரோனா பாதிக்கப்பட்ட நபர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஓமனில் இருந்து இந்தியா வந்த தமிழர் ஒருவர் உள்பட 3 பேருக்கு கோரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான தமிழர் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பு: ‘இந்தியர்களை போல் வணக்கம் சொல்லுங்கள்’ – இஸ்ரேல் பிரதமர்

சினாவின் வுஹான் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பால் அந்நாட்டில் இதுவரை 3000க்கும் மேற்பட்டோர பலியகியுள்ளனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சீனாவில் மட்டுப்பட தொடங்கியுள்ள கொரோனா வைரஸ் பரவல் ஆசிய நாடுகளில் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.

ஈரானில் 70-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கோரோனா வைரஸ் இந்தியாவில் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஓமனில் இருந்து இந்தியாவுக்கு வந்த தமிழர் ஒருவர் உட்படம் 31 பேருக்கு கோரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா உறுதி செய்யப்பட்ட மூவரின் உடல்நிலையும் சீராக உள்ளதாகவும் ஏற்கனவே கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல்நிலையும் சீராக உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை சிறப்பு செயலாளர் சஞ்சீவ் குமார் கூறியுள்ளார்.

தமிழர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஒரு மணிநேரத்தில் 40 விமானங்களை கையாளும் திறன் – ‘வாவ்’ ஸ்டேட்டஸ் பெறும் சென்னை விமான நிலையம்

அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஓமனின் மஸ்கட் நகரில் இருந்து சென்னை வந்தவருக்கு நடத்திய சோதனையில் கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 45 வயதுடைய அந்த நபரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்” என பதிவிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் 1,243 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகக் கூறினார்.

இந்த நிலையில், தமிழகத்தில் முதல் கோரோனா வைரஸ் பாதிப்பை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.