தெரிந்து கொள்ளுங்கள் – கொரோனா வைரஸ் vs காய்ச்சல், எது மிகவும் ஆபத்தானது?

corona virus covid 19
corona virus covid 19

ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும் தங்களது முதல் கொரோனா வைரஸ் இறப்புகளை அறிவித்துள்ளன. மேலும், உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களில் எண்ணிக்கை 3,000 ஐ தாண்டியுள்ளது.

இந்த வைரஸ் இப்போது அண்டார்டிகாவைத் தவிர அனைத்து கண்டங்களிலும் (59 நாடுகளில்) பரவியுள்ளது. கிட்டத்தட்ட 87,000 வழக்குகள் அதிகாரப்பூர்வமாக பதிவாகியுள்ளன. உலக சுகாதார அமைப்பு (WHO) COVID-19 (கொரொனோ வைரஸ்) தாக்கத்தை “உலக அளவில் மிக உயர்ந்த ஆபத்தாக”மதிப்பிட்டுள்ளது.

கவலைகள் ஒருபுறம் இருக்க, கொரோனா வைரஸ் உண்மையில் தீவிர அச்சுறுத்தல் தானா? காய்ச்சல் அதிகமான மக்களைக் கொல்லவில்லையா? என்று பல குரல்கள் ஒலிக்க தொடங்கிவிட்டன.

இந்தியாவில் 6 பேருக்கு கொரோனா உறுதி – நான்கு நாடுகளுக்கு விசா ரத்து

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், செய்தி ஊடகங்களையும், அரசியல் எதிரிகளும் COVID-19-ன் அச்சுறுத்தலை பெரிதுபடுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். COVID-19 “மரண தண்டனை அல்ல” என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

டொனால்ட் டிரம்ப்ன் இந்த கருத்து, கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த காலத்தில் தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் சில தலைவர்கள் பேசியது போல் உள்ளது.

இறப்பு விகிதங்களின் கேள்வி

காய்ச்சலை பெரும்பாலான மக்கள் “இயல்பானதாக” கருதுகிறோம். இருப்பினும் அது “பாதிப்பில்லாதது” என்று கருதாமல் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். நமது வைராலஜிஸ்டுகளாலும் காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியாது.

கொரோனா வைரஸ் காய்ச்சலை விட ஆபத்தானது தான் . டேட்டாக்கள் இங்கே.

பொதுவாக பருவகால காய்ச்சல்கள், 0.1% மக்களைக் கொல்கின்றன. அதாவது, சராசரியாக 1,000 பேரில் ஒருவர். சமூகத்தில் பின்தங்கிய, சுகாதார உள்கட்டமைப்பு இல்லாத ஏழை நாடுகளில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கருதுவது நியாயமானது.

கொரோனா வைரசுடன் இதை ஒப்பிடுக: உத்தியோகபூர்வ சீன புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வுஹானின் இறப்பு விகித மதிப்பீடுகள் 2% ஆக இருந்தன. அடுத்தடுத்த ஆராய்ச்சி இந்த எண்ணிக்கையை சுமார் 1.4% ஆகக் குறைத்தது. இந்த மதிப்பீடுகளையும், லேசான பாதிப்பு அல்லது நோய் அறிகுறிகளைக் காட்டாத பாதிப்புகளை ஒழுங்காக கணக்கிடவில்லை என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் .

ஒவ்வொரு வைரஸும் எவ்வளவு பாதிப்பை உருவாக்கும் ?

காய்ச்சலின் பெரும்பாலான வகைகளை விட கொரொனோ வைரஸ் மிகவும் தொற்றுநோ என்று சுகாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர் .

COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் சராசரியாக 2.2 பேரை பாதிக்கின்றனர். மருத்துவ நிர்வாகத்தால் தற்போது இந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இனி விமானத்தில் ‘wifi’ பயன்படுத்தலாம் – இந்திய அரசு அனுமதி

இருப்பினும், COVID-19 வைரஸ் ஈரானில் பரவுவது கவலை அளிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான தகவல் வெளியுலகிற்கு தெளிவில்லாது இருப்பது கவலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்தியா போன்ற தெற்காசியா நாடுகள், அதிக மக்கள் தொகை அடர்த்தி, பலவீனமான சுகாதார உள்கட்டமைப்பு கொண்டிருப்பதால், கொரொனோ வைரஸ் பெரும் சவாலாக இருக்கும் என்றும் கருதுகின்றனர்.

மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் யாவை?

கொரோனா வைரஸ் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா உள்ளிட்ட அனைத்து சுவாச நோய்களும் 65 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு மிகவும் ஆபத்தானவை. மோசமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களை எளிதில் தாக்கும்.

சீனாவில், பெண்களை விட அதிகமான ஆண்கள் இறந்து கொண்டிருப்பதாகத் கூறப்படுகிறது . ஆண்கள் பொதுவாக புகைப்பிடிப்பவர்கள், எனவே பலவீனமான நுரையீரல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த முறை போதுமான அளவில் விளக்கப்படவில்லை.ஆனால்,காய்ச்சலுக்கு இதுபோன்ற காரணங்கள் கொடுக்க முடியாது.