சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் வுஹான் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என பல்வேறு நகரங்களிலும் பரவிய இந்த வைரஸ் வுஹானில் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கடும் மிரட்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
திருச்சியில் இருந்து அபுதாபிக்கு எந்தெந்த கிழமைகளில் விமான சேவை தெரியுமா?
சீனாவில் நேற்றுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,442 ஆக அதிகரித்து இருந்தது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 ஆயிரம் ஆக அதிகரித்திருந்தது.
சீனாவை தொடர்ந்து இந்த வைரஸ் தென்கொரியாவில் அதிவேகமுடன் பரவ தொடங்கியுள்ளது. இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர். வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 763 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 8,720 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ‘ரசம்’ சாப்பிட பரிந்துரைத்து சீனாவில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா எச்சரிக்கை: அவசியம் இல்லாமல் சிங்கப்பூர் செல்வதைத் தவிர்க்கவும் – இந்திய அரசு
அந்த பேனர்களில் 5000 ஆண்டுகள் பழமையான இந்திய மூலிகை உணவான ரசம் உடலுக்கு பல்வேறு நலன்களை வழங்குகிறது.
குறிப்பாக, வயிறு மற்றும் சுவாச பிரச்சனைகளுக்கு பெரிதும் உதவுகிறது.
எப்பேற்பட்ட வைரஸ் தொற்றுக்கும் சிறந்த எதிர்ப்பு நிவாரணி ரசம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.