கொரோனா அச்சுறுத்தல் – சென்னையில் 40% விமான சேவை குறைந்தது

இந்தியா திரும்பும் விமானங்கள்
Image Credits DGCA

சென்னை: கரோனா அச்சம் காரணமாக சென்னையில் 40 சதவீத விமான சேவை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க விமான நிலையத்தில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்தியா முழுக்க கொரோனா விழிப்புணர்வு ‘காலர் டியூன்’ – செல்போன் நிறுவனங்கள் நடவடிக்கை

இதே போல் சென்னை விமான நிலையத்திலும் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் தாக்காமல் இருக்க தேவையற்ற பயணத்தைத் தவிா்க்க வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியதைத் தொடா்ந்து பெரும்பாலானோா் பயணத்தைத் தவிா்த்து வருகின்றனா்.

சென்னையின் 2வது விமான நிலையம் – பரந்தூர் அல்லது செய்யாறில் அமைவது உறுதி!

குறிப்பாக சென்னையில் இருந்து ஹாங்காங் செல்லும் விமானத்தில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்தது. இதனால் கடந்த 2 வாரங்களுக்கு முன்னரே சென்னை – ஹாங்காங் இடையேயான விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதேபோல் குவைத், பஹ்ரைன், ஓமன், துபை போன்ற நாடுகளுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்துள்ளது. இதனால் பல்வேறு விமான நிறுவனங்களைச் சோ்ந்த சுமாா் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 40 சதவீத விமான சேவைகள் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.