இந்தியாவில் ஒரே நாளில் 24, 850 பேருக்கு கொரோனா தொற்று!

நேற்று 24,850 பேருக்கு கொரோனா
Deccan Herald

உலகளவில் கொரோனா பாதிப்பில் 3- வது இடத்தில் உள்ள ரஷ்யாவை நெருங்கியது இந்தியா. ரஷ்யாவில் 6.74 லட்சம் பேருக்கு கொரோனா உள்ள நிலையில் இந்தியாவில் 6.73 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 24,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று (ஜூலை 05) காலை 08.00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா

  • பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,48,315 -லிருந்து 6,73,165 ஆக உயர்ந்துள்ளது.
  • உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,655 -லிருந்து 19,268 ஆக அதிகரித்துள்ளது.
  • பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,94,227 -லிருந்து 4,09,083 ஆக உயர்ந்துள்ளது.
  • பாதித்த 2,44,814 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 2,00,064 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,08,082 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,671 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் தமிழகத்தில் 1,07,001, டெல்லியில் 97,200, குஜராத்தில் 35,312, ராஜஸ்தானில் 19,532, மத்திய பிரதேசத்தில் 14,604, உத்தரப்பிரதேசத்தில் 26,554, ஆந்திராவில் 17,699, தெலங்கானாவில் 22,312, கர்நாடகாவில் 21,549, கேரளாவில் 5,204, புதுச்சேரியில் 802 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.