இந்தியா: கிராம பகுதிகளுக்கு திரும்பிய ஊழியர்களை மீண்டும் வேலைக்கு அழைப்பதில் சிரமத்தை சந்திக்கும் நிறுவனங்கள் ..!

இந்தியாவில் தங்களுடைய சொந்த கிராம பகுதிகளுக்கு திரும்பிய ஊழியர்களை, திரும்பவும் பணியில் ஈடுபடுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது

அதாவது ஊழியர்களை வேலைகளுக்கு திரும்ப அழைப்பதில் நிறுவனங்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் அதிபர் ஹலிமா யாகோப் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு..!

பல்வேறு சலுகைகள் மூலம் ஊழியர்களை வேலைக்கு அழைக்க நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றனர். அதில் குறிப்பாக இலவச விமானச்சீட்டுகள், ஊதிய உயர்வு, இலவச மருத்துவப் பரிசோதனைகள் போன்றவையும் அடங்கும்.

அது ஒருபுறம் இருந்தாலும், ஊழியர்கள் இந்த கிருமிதொற்றுக்கு அஞ்சி பாதிக்கப்பட்ட நகர்களுக்கு செல்வதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் மும்பை நகரின் கட்டுமானத் துறையில் பணிபுரியும் 80 சதவீத ஊழியர்கள் கிராமப்புறத்திற்குத் திரும்பியுள்ளனர். அதாவது தற்போது 10,000க்கும் மேற்பட்ட கட்டுமானத் தளங்களில் வேலை இன்னும் தொடங்கப்படவில்லை என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அதுபோக மற்ற துறைகளில் உள்ள வர்த்தகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : நான்கு மடங்கு வேகத்தில் COVID-19 சோதனை முடிவுகள் – சிங்கப்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg