“என் மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கணும்” – வரதட்சணை கேட்ட தமிழக உதவி கலெக்டர்

sub collector sivaguru prabakaran

பேராவூரணி அருகே உள்ள கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட உதவி ஆட்சியர் சிவகுருபிரபாகரன் பற்றித் தான் சமூக தளங்களில் பேச்சு. பலரும் அவரின் செயலை எண்ணி பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். அப்படி என்ன அவர் செய்தார்?

தனக்கு வரும் மனைவி ஒரு டாக்டராக இருக்க வேண்டும், அவர் இந்தக் கிராமத்தில் தங்கி மருத்துவ சேவை செய்ய வேண்டும். இதுதான் எனக்கு அந்தப் பெண் தரும் வரதட்சணை’ எனக் கூறி அதற்கு சம்மதம் தெரிவித்த பெண்ணைக் கரம் பிடித்து அசத்தியிருக்கிறார்.

கொரோனா வைரஸ்: மெக்கா பயணிகளுக்கு விசாவை நிறுத்திய சவுதி

சென்னை நந்தனம் கல்லூரியின் கணிதப் பேராசிரியர் ஒருவரின் மகளான டாக்டர் கிருஷ்ணபாரதி இதற்கு சம்மதிக்க, சில தினங்களுக்குமுன் சிவகுரு பிரபாகரனுக்கும் கிருஷ்ணபாரதிக்கும் அவரது சொந்த ஊரிலேயே விவசாயிகள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

பேராவூரணி அருகே உள்ள மேல ஒட்டங்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுரு பிரபாகரன். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உதவி ஆட்சியராகப் பணிபுரிந்து வருகிறார். சிறுவயது முதலே ஊரின் நலன் சார்ந்த விஷயங்களில் அக்கறையோடு செயல்பட்ட இவர் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்து தனது கடினமான உழைப்பால் படித்து உதவி ஆட்சியராகப் பணிக்குச் சேர்ந்தவர்.

இதுகுறித்து நாம் அவரிடம் பேசிய போது,

“அப்பா விவசாயி. நான் பிறந்து வளர்ந்தது மேல ஒட்டங்காடு கிராமம். ஐந்தாம் வகுப்பு வரை வீட்டுக்கு அருகில் உள்ள அரசு பள்ளியில் தான் படித்தேன். ஐந்தாம் வகுப்புக்கு மேல் புனல்வாசல் புனித ஆரோக்கிய மேரி உயர்நிலைப்பள்ளியில் படித்தேன். 12ம் வகுப்பில் 1093 மதிப்பெண் எடுத்தேன். ஆனால், எஞ்சினியரிங் படிக்க விருப்பப்பட்ட என்னை கல்லூரியில் சேர்க்க என் தந்தையிடம் பண வசதி இல்லை. இருப்பினும், அவர் சக்திக்கு முடிந்த அளவுக்கு போராடி, என்னை ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சேர்த்துவிட்டார். பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி எப்போதும் முதல் மாணவனாகவே வந்தேன்.

சென்னை ஏர்போர்ட்டில் நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம் – எம்.பி. தயாநிதிமாறன் கடிதம்

பிறகு மர அறுவை மில்லில் வேலைக்கு சேர்ந்தேன். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு அங்கு வேலை செய்த பிறகு, தந்தை பெரியார் அரசு கல்லூரியில் எஞ்சினியரிங் படிக்க இடம் கிடைத்தது. பிறகு, என் நண்பர் ஒருவர் தான் ஐஐடி-யில் சேருவது குறித்து எனக்கு ஊக்கமளித்தார்.

அதற்கு தீவிர பயிற்சி எடுத்து GATE-ல் நல்ல ஸ்கோர் எடுத்தேன். இதனால் M-tech படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதேசமயம், ஐஏஎஸ் படிப்பதிலும் தீவிர கவனம் செலுத்தினேன். தீவிர முயற்சிக்கு பலனாக IES பணி கிடைத்தது. அதில் பணிக்கு சேர்ந்து வேலைப்பார்த்தாலும், எனக்கு திருப்தி இல்லை. எனது கனவு ஐஏஎஸ் என்பதை நோக்கியே இருந்தது.

எனது விடா முயற்சியால் நான்காவது அட்டெம்ப்ட்டில் 101வது ரேங்க் பிடித்து ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றேன். எனது அக்கா, பாட்டி, நண்பர் தான் நான் இந்தளவு உயர்ந்ததற்கு காரணமாக அமைந்தார்கள்” என்று முடித்தார்.