“கோவையில் இருந்து டெல்லி, மும்பை, பெங்களூருவுக்கு விமான சேவை”- விஸ்தாரா நிறுவனம் அறிவிப்பு!

Photo: Vistara Airlines Official Twitter Page

விஸ்தாரா விமான நிறுவனம் (Vistara Airlines), கோவையில் இருந்து டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய மூன்று நகரங்களுக்கு இரு மார்க்கத்திலும் விமான சேவைகளை வழங்க உள்ளது. குறிப்பாக, கோவையில் இருந்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு அதிரடியாக பயணக் கட்டணச் சலுகையை விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

‘திருச்சி, கோலாலம்பூர் இடையே தினசரி விமான சேவை’- மலின்டோ ஏர் நிறுவனம் அறிவிப்பு!

அதன்படி, கோவை, டெல்லி இடையே இரு மார்க்கத்திலும் வரும் மே 20- ஆம் தேதி அன்று விமான சேவையைத் தொடங்கவுள்ளது விஸ்தாரா நிறுவனம். கோவையில் இருந்து டெல்லிக்கு விமான பயணக் கட்டணமாக ரூபாய் 6,149 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கோவை மும்பை இடையே இரு மார்க்கத்திலும் வரும் மே 27- ஆம் தேதி அன்று விமான சேவையைத் தொடங்கவுள்ளது. கோவையில் இருந்து மும்பைக்கு விமான பயணக் கட்டணமாக ரூபாய் 4,549 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோவையில், பெங்களூரு இடையே இரு மார்க்கத்திலும் வரும் மே 27 – ஆம் தேதி விமான சேவைத் தொடங்கவுள்ளது. கோவையில் இருந்து பெங்களூருவுக்கு விமானப் பயணக் கட்டணமாக ரூபாய் 3,299 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

‘திருச்சி, குவைத் இடையேயான விமான சேவை’- புதிய அறிவிப்பை வெளியிட்டது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்!

விமானப் பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airvistara.com/in/en என்ற விஸ்தாரா நிறுவனத்தின் இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.