கோவை, ஷார்ஜா இடையேயான ஏர் அரேபியா விமான சேவை குறித்து விரிவாகப் பார்ப்போம்!

Photo: AirArabia

கோவை மற்றும் ஷார்ஜா இடையே இரு மார்க்கத்திலும் தினசரி மற்றும் நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் அரேபியா (Air Arabia) நிறுவனம். வாரத்தில் செவ்வாய்கிழமை மற்றும் புதன்கிழமைகளைத் தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் விமான சேவையை விமான நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த வழித்தட விமான சேவைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

சென்னை, துபாய் இடையேயான ஏர் இந்தியா விமான சேவை குறித்த முழுமையான தகவல்!

கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு G9414 என்ற விமானமும், ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு G9413 என்ற விமானமும் இயக்கப்பட்டு வருகிறது. பயண நேரம் மூன்று மணிநேரம் 50 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இந்த வழித்தட விமான சேவைக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் எந்தெந்த நகரங்களில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமான சேவையை வழங்குகிறது?- விரிவான தகவல்!

விமான பயண அட்டவணை மற்றும் விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airarabia.com/en என்ற ஏர் அரேபியாவின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.