அமைச்சர் பந்து வீச பேட்டிங் செய்த முதல்வர் பழனிசாமி (வீடியோ)

cm palanisamy playing cricket
cm palanisamy playing cricket

சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் பந்து வீச பேட்டை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுழற்றினார். அதிகாரிகளும் அமைச்சர்களும் கிரிக்கெட் விளையாடி அசத்தினர்.

ககன்யான், சந்திரயான் 3 – 2020ல் இந்தியாவின் இரண்டு ஹாட் மிஷன்

சென்னையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. சென்னை மாநிலக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

அப்போது, போட்டியை தொடக்கி வைக்கும் விதமாக, முதல்வர் பழனிசாமி கிரிக்கெட் விளையாடி அசத்தினார். பக்கா கிரிக்கெட் வீரரை போல் வெள்ளை நிற பேண்ட், சர்ட், தொப்பி அணிந்து பேட்டிங் செய்த முதல்வர் பழனிசாமிக்கு அமைச்சர் ஜெயக்குமார் பந்து வீச, சில ஷாட்களை லாவகமாக ஆடினார்.

அது போல் டிஜிபி திரிபாதியும் பந்துகளை வீசினார். இந்த போட்டி குறித்து முதல்வர் “எடப்பாடி கூறுகையில் உடல் ஆரோக்கியமாக இருந்தால் எந்த வயதிலும் விளையாடலாம். மன அழுத்தத்தை போக்க விளையாட்டு அவசியமானதொன்று” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க – ஊரக உள்ளாட்சித் தேர்தல் – ஆன்லைனில் புள்ளி விவரத்துடன் முடிவுகளை பார்ப்பது எப்படி?

முதல்வர் கிரிக்கெட் விளையாடியதை அங்கிருந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் கை தட்டி உற்சாகப்படுத்தினர்.