“சென்னை, ஷார்ஜா இடையே விமான சேவை”- டிக்கெட் முன்பதிவைத் தொடங்கியது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்!

Photo: Wikipedia

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, ஷார்ஜா இடையே வாரத்திற்கு இரண்டு நாட்கள் இரு மார்க்கத்திலும் விமான சேவை வழங்கப்படும். அதன்படி, வியாழன்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விமான சேவை வழங்கப்படும். ஷார்ஜாவில் இருந்து சென்னைக்கு IX 636 என்ற விமானமும், சென்னையில் இருந்து ஷார்ஜாவுக்கு IX 635 என்ற விமானம் இயக்கப்படவுள்ளது. இந்த விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

“டெல்லியில் இருந்து துபாய், ஷார்ஜாவுக்கு தினசரி விமான சேவை”- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு!

அதேபோல், அமிர்தசரஸ், ஷார்ஜா இடையே இரு மார்க்கத்திலும் வாரத்திற்கு நான்கு நாட்கள் விமான சேவை வழங்கப்படும். அதன்படி, திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய நாட்களில் விமான சேவை வழங்கப்படும். இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

‘இந்தியாவின் திருச்சி, டெல்லி உள்பட 10 நகரங்களில் இருந்து துபாய்க்கு விமான சேவை’- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.