‘சென்னை, கோலாலம்பூர் இடையே நேரடி விமான சேவை’- இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு!

Photo: IndiGo Official Twitter Page

இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் மே மாதம் 15- ஆம் தேதி முதல் சென்னை, கோலாலம்பூர் இடையே தினசரி விமான சேவை வழங்கப்படும். இந்த விமான சேவை நேரடி விமான சேவை ஆகும். அதன்படி, சென்னையில் இருந்து மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூருக்கு இண்டிகோ நிறுவனத்தின் 6E 1815 என்ற விமானமும், கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு 6E 1818 என்ற விமானமும் இயக்கப்படும்.

திருச்சி, ஷார்ஜா இடையே ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான சேவை- ஏப்ரல், மே மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.goindigo.in/ என்ற இண்டிகோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து தோஹாவுக்கு விமான சேவை- பயண அட்டவணையை வெளியிட்டது ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’!

உலகம் முழுவதும் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதாலும், கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்களின் விகிதம் அதிகரித்துள்ளதாலும், சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. இதனால், இந்தியாவில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையில் விமான நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.