சென்னை சர்வதேச விமான நிலையத்தில் (Chennai International Airport) புதிய இணை ஓடுபாதை பயன்பாட்டிற்கு வந்திருப்பதையடுத்து, விமானங்களின் தாமதத்தைக் குறைக்க முடியும் என்கிறது விமான நிலையத்தின் நிர்வாகம்.
சென்னை, குவைத் இடையேயான ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவை குறித்த முழுமையான தகவல்!
தமிழகத்தில் திருச்சி, கோவை, மதுரை, சென்னை ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இதில், அதிக அளவு சர்வதேச விமான சேவைகளை வழங்கி வரும் விமான நிலையமாக இருப்பது சென்னை சர்வதேச விமான நிலையம். இங்கிருந்து 100- க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் விமான சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன. பயணிகள் விமான சேவைகள் மட்டுமின்றி, சரக்கு விமான சேவைகளையும் விமான நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
இந்த நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் முதன்மை விமான ஓடுபாதைக்கு அருகில் புதிய ஓடுபாதை திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதற்கு முன்பு இருந்த ஓடுபாதை முதன்மை ஓடுபாதையில் இருந்து 123 மீட்டர் தொலைவில் அமைந்திருந்த நிலையில், தற்போது இணையாக அமைக்கப்பட்டுள்ள ஓடுபாதை 172.5 மீட்டர் நீளம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
‘திருச்சி, மணிலா இடையேயான ஏர் ஏசியாவின் விமான சேவை’- விரிவான தகவல்!
தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ள பிராவோ டாக்சிவே (Bravo Taxiway) விமான நிலையத்தின் முதன்மை ஓடுபாதைக்கு இணையாக இயங்குகிறது. இது 90 விழுக்காடு உள்நாட்டு, சர்வதேசம் மற்றும் சரக்கு இயக்கங்களுக்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையத்தின் வடக்கு பகுதியில் இதற்கு முன்னதாக ‘A’ டாக்சிவே இருந்தது. இதற்கு சில கட்டுப்பாடுகளை விமான போக்குவரத்துத்துறை இயக்ககம் விதித்தது.
மேலும், டெர்மினலில் இருந்து முதன்மை ஓடுபாதைக்கு விமானங்கள் செல்வதற்கு அதிக நேரமும், எரிபொருள் தேவையும் அதிகமாக இருந்தது. இதை எளிதாக்கும் வகையில் முதன்மை விமான ஓடுபாதைக்கு இணையாக பிராவோ டாக்சிவே பாதை, கடந்த 2018- ஆம் ஆண்டு முதல் வடிவமைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இதன் காரணமாக, விமான நிலையத்தின் பீக் ஹவர் கையாளும் திறன் அதிகரித்துள்ளது. ஒரு மணி நேரத்தில் 36 விமானங்கள் இயக்கப்படும் நிலையில், தற்போது ஒரு மணி நேரத்தில் 45 முதல் 50 ஆக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.