‘சென்னை, ஷார்ஜா இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Air India Express Official Twitter Page

சென்னை, ஷார்ஜா இடையே இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express). இந்த வழித்தடத்தில், வாரத்தில் வியாழன்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் விமான சேவைகளை வழங்கி வருகிறது. சென்னையில் இருந்து ஷார்ஜாவுக்கு IX 635 என்ற விமானமும், ஷார்ஜாவில் இருந்து சென்னைக்கு IX 636 என்ற விமானமும் இயக்கப்பட்டு வருகிறது.

‘திருச்சியில் இருந்து கோலாலம்பூர் வழியாக ஹனோய்க்கு விமான சேவை’- ஏர் ஏசியா நிறுவனம் அறிவிப்பு!

இந்த வழித்தட விமான சேவைக்கான ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான பயண அட்டவணை மற்றும் விமான பயண கட்டணம் உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.