சென்னை, ஜெட்டா இடையே மீண்டும் விமான சேவை- சவுதி ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

Photo: Saudia Airlines

வரும் ஜூன் 2- ஆம் தேதி முதல் சென்னை, ஜெட்டா இடையே இரு மார்க்கத்திலும் மீண்டும் விமான சேவை வழங்கப்படும் என சவுதி ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

“சென்னை, ஷார்ஜா இடையே விமான சேவை”- டிக்கெட் முன்பதிவைத் தொடங்கியது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்!

இது தொடர்பான, சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பில், “வரும் ஜூன் மாதம் 2- ஆம் தேதி முதல் சென்னை, ஜெட்டா இடையே இரு மார்க்கத்திலும் வாரத்தில் மூன்று நாட்களுக்கு விமான சேவை வழங்கப்படும். அதன்படி, வியாழக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்களுக்கு விமானங்கள் இயக்கப்படும்.

“டெல்லியில் இருந்து துபாய், ஷார்ஜாவுக்கு தினசரி விமான சேவை”- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு!

சென்னையில் இருந்து ஜெட்டாவுக்கு SV 769 என்ற விமானமும், ஜெட்டாவில் இருந்து சென்னைக்கு SV 768 என்ற விமானமும் இயக்கப்படும். இந்த விமான சேவைக்கான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.saudia.com/என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.