டாடா குழுமத்துக்கு (Tata Group) சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் (Air India), இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, கத்தார் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமான சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா, துபாய், அபுதாபி உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.
சென்னை, கோலாலம்பூர் இடையேயான ‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் விமான சேவைக் குறித்து பார்ப்போம்!
அந்த வகையில், சென்னை, அபுதாபி இடையே மும்பை, இந்தூர், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்கள் வழியாக இருமார்க்கத்திலும் மூன்றுக்கும் மேற்பட்ட தினசரி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த வழித்தடத்தில் ஏர்பஸ் 321 என்ற விமானத்தை விமான நிறுவனம் இயக்கி வருகிறது.
திருச்சி, அபுதாபி இடையேயான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான சேவைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
இந்த வழித்தட விமான சேவைக்கான ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான, மேலும் விவரங்களுக்கு https://www.airindia.in// என்ற ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.