ஈரானிய புரட்சிகர காவல்படைத் தளபதியுமான மேஜர் ஜென்ரல் காஸ்ஸெம் சுலைமானி அமெரிக்கா நடத்திய வான் வழித் தாக்குதலில் கடந்த ஜன.3ம் தேதி பாக்தாத்தில் வைத்துக் கொல்லப்பட்டார்.
இதனால், ஈரான் முழுவதும் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. தங்கள் நாயகன் கொல்லப்பட்டதற்காக அமெரிக்க படைகள் மீது 35 இடங்களில் தாக்குதல் நடத்த இடம் குறிக்கப்பட்டுவிட்டதாக ஈரான் அறிவித்திருப்பது உலக நாடுகளை கவலை அடைய வைத்துள்ளது.
இதனால், பிராந்தியத்தில் பாதுகாப்பை அதிகரிக்க, HMS Montrose மற்றும் HMS Defender ஆகிய இரு போர்க் கப்பல்களை Strait of Hormuz பகுதிக்கு அனுப்ப பிரிட்டன் உத்தரவிட்டுள்ளது.
லண்டனில் உள்ள ஹை கமிஷன் ஆஃப் இந்தியா – எமெர்ஜென்சி நம்பர் என்ன?
இவ்விரண்டு போர்க் கப்பலை அனுப்பி நமது நாட்டு குடிமக்களையும், அங்கு நிறுத்தப்பட்டுள்ள பிரிட்டன் கப்பல்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் டொமினிக் ரேப் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “மிகத் தெளிவாக தெளிவுப்படுத்துகிறோம். சுலைமானி ஒரு பிராந்திய அச்சுறுத்தலாக இருந்தார். அமெரிக்கர்கள் தங்களைத் தாங்களே கண்டறிந்த நிலையை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மேலும் தற்காப்பு நடவடிக்கையிலும் அவர்களுக்கு உரிமை உண்டு. அது எந்த அடிப்படையில் செய்யப்பட்டது என்பதை அவர்கள் விளக்கியுள்ளனர். அவர்கள் தங்களைக் கண்டறிந்த நிலைமைக்கு நாங்கள் அனுதாபப்படுகிறோம். இந்த விவகாரத்தில் நாங்கள் அதே நிலைப்பாட்டில் உள்ளோம்” என்றார்.
சுலைமானி படுகொலை செய்யப்பட்ட பிறகு, ஈராக் ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி மற்றும் பிரெஞ்சு மற்றும் ஜெர்மனிய நாடுகளுடன் பேசியதாக வெளியுறவு செயலாளர் கூறினார். மேலும் பிரிட்டனின் கவனம் அமைதியை மீட்டெடுப்பதிலும், பிராந்தியத்தில் உள்ள பிரிட்டன் படைகளை பாதுகாப்பதிலும் குடிமக்களையும் பாதுகாப்பதிலும் தான் உள்ளது என்றார்.
35 டார்கெட் ரெடி – ஈரான்! குடிமக்களை மீட்டுக் கொண்டுவர 2 போர்க்கப்பலை அனுப்பிய பிரிட்டன்