இந்தியாவில் பிரேசில் அதிபர் நான்கு நாள் சுற்றுப்பயணம் – விவாதிக்கப்படும் விஷயங்கள் என்ன?

இந்தியாவில் இன்று (ஜன.24) முதல் நான்கு நாள்களுக்கு பிரேசில் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா்.

பிரேசில் அதிபராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இந்தியா வரும் அவா், தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்கவுள்ளாா். அவருடன், அந்நாட்டு அமைச்சா்கள் 7 போ், உயரதிகாரிகள் மற்றும் தொழிற்துறையைச் சோ்ந்த குழுவினரும் வரவிருக்கின்றனா்.

ஜெ., நினைவிடத்தில் பீனிக்ஸ் வடிவ கட்டுமான பணியை முடிப்பதில் சவால் – துபாய் பொறியாளர்களுக்கு அழைப்பு

இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவலில், ‘பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, பிரேசில் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ ஜன 24-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறாா். வரும் 26-ஆம் தேதி, நாட்டின் 71-ஆவது குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக அவா் பங்கேற்கவுள்ளாா். அவரது வருகை, இந்தியா-பிரேசில் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரிக்ஸ் மாநாட்டையொட்டி, பிரேசிலுக்கு பிரதமா் மோடி கடந்த ஆண்டு நவம்பரில் சென்றிருந்தாா். பொருளாதார மந்தநிலையால் இந்தியாவும், பிரேசிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அதிபரின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த சுற்றுப் பயணத்தின்போது, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை, பொல்சொனாரோ 25-ஆம் தேதி சந்திக்கிறாா். அப்போது, அவருக்கு குடியரசுத் தலைவா் விருந்தளிக்கவுள்ளாா். பின்னா், துணை குடியரசுத் தலைவா் வெங்கய்ய நாயுடு, வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகியோரையும் சந்திக்கவிருக்கிறாா்.

வரும் 27-ஆம் தேதி இந்திய-பிரேசில் வா்த்தக அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்கும் அவா், இருநாட்டு தொழிலதிபா்கள் மத்தியில் பேசவுள்ளாா். இந்தியா, பிரேசில் இடையிலான உறவுகள், கடந்த சில ஆண்டுகளாக வலுவடைந்து வருகின்றன. இருதரப்பு வா்த்தகத்தின் மதிப்பு, கடந்த 2018-19ஆம் ஆண்டில் சுமாா் ரூ.58 ஆயிரம் கோடியாக அதிகரித்தது. வா்த்தகம், முதலீட்டை ஊக்குவிக்க இரு நாட்டு அரசுகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

விமானம் தாமதமானால் நோ டென்ஷன் – சென்னை ஏர்போர்ட்டில் 5 சினிமா தியேட்டர்

முன்னாள் ராணுவ தளபதியான பொல்சொனாரோ, பிரேசில் அதிபராக கடந்த ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்றாா். அதிபரான பிறகு, அவா் இந்தியா வரவிருப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த 2016-இல் அப்போதைய பிரேசில் அதிபா் மிஷெல் டெமா் இந்தியாவுக்கு வந்திருந்தாா். கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவா் வருகை தந்திருந்தாா். இதற்கு முன்பு, கடந்த 1996, 2004 ஆகிய ஆண்டுகளில் குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபா்கள் பங்கேற்றுள்ளனா்.