நிச்சயதார்த்தம் அறிவித்த பில்கேட்ஸ் மகள் – வைரலாகும் தந்தையின் பதில்

bill gates daughter jennifer announced engagement
bill gates daughter jennifer announced engagement

உலகின் மிகப்பெரிய பணக்காரர் பில்கேட்ஸின் மகள் ஜெனிஃபர் தனது நிச்சயதார்த்தம் பற்றி அறிவித்ததற்கு பில்கேட்ஸ் அளித்த பதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உலகின் மிகப்பெரிய பணக்காரர் பில் கேட்ஸின் மகள் ஜெனிபர் கேட்ஸ் பல ஆண்டு டேட்டிங்கிற்குப் பிறகு காதலன் நேயல் நஸ்ஸருடன் தனது நிச்சயதார்த்தத்தை அறிவித்துள்ளார். ஜெனிஃபர் கேட்ஸ் தனது நிச்சயதார்த்தை வியாழக்கிழமை இன்ஸ்டாகிராமில் தெரிவித்து அதில், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த எகிப்திய மில்லியனருடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ் நிறுவனருமான பில்கேட்ஸ்க்கு 1994 ஆம் ஆண்டு மெலிண்டா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ரோரி ஜான் என்ற மகனும் ஜெனிஃபர் கேத்தரின், போபே அடிலெ என இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்திய தலைநகர் டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு.!

பில்கேட்ஸின் மகள் ஜெனிஃபர் கேத்தரின் பல ஆண்டுகள் நேயல் நஸ்ஸர் என்பவருடன் டேட்டிங்கில் இருந்த நிலையில், ஜெனிஃபர் அவருடன் நிச்சயதார்த்தம் செய்ய முடிவுசெய்துள்ளதை இன்ஸ்டாகிராமில்அறிவித்துள்ளார்.

இது குறித்து ஜெனிஃபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேயல் நஸ்ஸருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு குறிப்பிடுகையில், நேயல் நஸ்ஸர் நீங்கள் எனக்கு ஒரு வித்தியாசமானவர். கடந்த வார இறுதியில் என் கால்கள் தரையில் நிற்கவில்லை. எனக்கு எதிர்பாராத சில மகிழ்ச்சிகளை அளித்தீர்கள். அது மில்லியன் மடங்கு தொடர்கிறது” என்று மோதிர எமோஜியுடன் தெரிவித்துள்ளார்.

பில்கேட்ஸ் தனது மகள் ஜெனிஃபர் அவரது நிச்சயதார்த்தம் பற்றி அறிவித்தற்கு, “என் உடல் முழுவதும் சிலிப்படைந்துவிட்டது. வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். அதே போல, அவருடைய தாயார் மெலிண்டாவும், “நான் உன்னையும் நேயல் நஸ்ஸரையும் நினைத்து சிலிர்த்துப்போய்விட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.

உலகின் மிகப்பெரிய பணக்காரரான பில்கேட்ஸின் மகள் ஜெனிஃபருடன் நிச்சயதார்த்தம் செய்ய உள்ள நேயல் நஸ்ஸர் என்ற நபர் யார் என்று பலரும் இணையத்தில் தேடிவருகின்றனர்.

இந்தியாவிலும் வூஹான் வைரஸ்; தென் மாநிலத்தில் வைரஸ் பாதிக்கப்பட்ட முதல் நபர் உறுதி..!

29 வயதான நேயல் நஸ்ஸர் 2020 ஒலிம்பிக் போட்டியில் எகிப்து சார்பில் குதிரையேற்ற வீரராக கலந்துகொள்ள உள்ளார். இவர் சிகாகோவில் பிறந்து குவைத்தில் வளர்ந்தவர். 2013 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார்.