உலக விமான நிலைய விருதுகள் 2020: இந்தியாவின் சிறந்த விமான நிலையமாக பெங்களூரு விமான நிலையம் தேர்வு

2020 உலக விமான நிலைய விருதுகளில் நான்கு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இந்தியாவிலும் மத்திய ஆசியாவிலும் சிறந்த விமான நிலையமாக பெங்களூரின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் பயணிகளால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

“11 ஆண்டு பழமையான விமான நிலையத்தைப் பொறுத்தவரை இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை” என்று பெங்களூர் சர்வதேச விமான நிலைய லிமிடெட்(BIAL)ன் நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியான ஹரி.கே.மரார் கூறினார்.

“இந்த விருது பி.எல்.ஆர் விமான நிலையத்தில் எங்கள் பயணிகளுக்கு முன்னோடி தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை முயற்சிகள் மூலம் உலகத் தரம் வாய்ந்த அனுபவத்தை வழங்குவதற்கான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என்று BIAL ஒரு அறிக்கையில் மேற்கோளிட்டுள்ளது.

மேலும் “இது போன்ற ஒரு நேரத்தில், எங்கள் தொழில் இத்தகைய சவால்களை எதிர்கொள்ளும் போது, இந்த விருது பி.எல்.ஆர் விமான நிலையத்தில் அணியின் மன உறுதியைப் புதுப்பித்துள்ளது” என்று மரார் கூறினார்.

550 க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் வாடிக்கையாளர் சேவை மற்றும் வசதிகளை மதிப்பிடுவதன் மூலம் அவை உலக விமான நிலையத் துறையின் தரமான அளவுகோலாகக் கருதப்படுகின்றன. ஆறு மாத கணக்கெடுப்பு காலத்தில் 100 க்கும் மேற்பட்ட தேசிய விமான நிலைய வாடிக்கையாளர்களால் நிறைவு செய்யப்பட்ட உலக விமான நிலைய ஆய்வு மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.