இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3000 ஐ நெருங்கிவிட்டது. இது சற்று கவலை அளிக்கக்கூடிய விஷயமாக இருந்தாலும் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் மற்ற நாடுகளை காட்டிலும் குறைவாகவே இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கு காரணம் BCG Vaccine(Bacillus Calmette-Guerin)
இந்தியாவில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு குழந்தை பிறந்த 2 வது நாள் இந்த BCG என்ற தடுப்பூசி போடப்படுகிறது.இந்த தடுப்பூசி எதற்காக போடப்படுகிறது என்றால் டி.பி என்று சொல்லப்படும் காசநோய் வராமல் தடுக்க இந்த தடுப்பூசி போடப்படுகிறது.இந்த BCG தான் இந்தியர்களை கொரோனாவில் இருந்து காக்கும் கவசமாக ஆகப்போகிறது என்கின்றனர் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.
இந்த BCG தடுப்பூசி காசநோய்க்கு மட்டுமல்ல சுவாசம் சார்ந்த பல்வேறு நோய்களுக்கும் தடுப்பூசியாய் உபயோகிக்கப்படுகின்றன.காசநோயை ஒழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் பெரும்பாலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. கொரோனாவும் சுவாசம் தொடர்புடைய ஒரு நோய் என்பதால் BCG தடுப்பூசி போடும் வழக்கமுள்ள இந்தியர்களுக்கு இயற்கையாகவே கொரோனாவை எதிர்க்கும் திறன் அமைந்துள்ளதாக கூறுகின்றனர்.
உலக நாடுகளில் எந்தெந்த நாடுகளில் இந்த BCG தடுப்பூசி போடுவதில்லையோ அங்கெல்லாம் இந்த கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளதையும் அதே சமயம் BCG தடுப்பூசி போடும் வழக்கமுள்ள நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறைவாக உள்ளதையும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உதாரணமாக அமெரிக்க மற்றும் இத்தாலி இந்த இரண்டு நாடுகளிலும் குழந்தைகளுக்கு BCG தடுப்பூசி போடும் வழக்கம் இல்லை. இன்று உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் இத்தாலியும்தான் முதல் இரண்டு இடத்தில் உள்ளன. அதே சமயம் BCG தடுப்பூசி போடும் வழக்கமுள்ள இந்தியாவில் இதன் தாக்கம் குறைவாக இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
இது தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றையும் இன்னும் சில தினங்களில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் வெளியிடவுள்ளனர். நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வந்தாலும் இந்தியாவில்தான் அதன் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்று வெளிவந்துள்ள புதிய ஆராய்ச்சி முடிவுகள் இந்திய மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.