உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை, மே 17 -ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக DGCA அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் உள்நாட்டு வெளிநாட்டு விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ஊரடங்கு ஏப்ரல் 14 முடிவடைந்தால் ஏப்ரல் 30 முதல் விமான சேவைகள் துவக்க வாய்ப்புள்ளதாக இந்திய அரசு அறிவித்தது. ஆனால் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு மே முதல் வாரத்தில் விமான சேவைகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது மேலும் 2 வாரங்கள் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்ற வந்த பின்னர் மே 17 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விமான சேவையை தொடர்வது குறித்து மறு உத்தரவு வரும் வரை விமான நிறுவனங்கள் காத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் சர்வதேச அளவிலான சரக்கு போக்குவரத்துக்கு பொருந்தாது என்றும் விமான போக்குவரத்து இயக்குநரகம்(DGCA) தெளிவுபடுத்தியுள்ளது.