இந்திய வரலாற்றிலேயே மிகமோசம்; 6 ஆண்டுகளில் 90 லட்சம் பேர் வேலையிழப்பு..!

Indian unemployment problem

2011-12 முதல் 2017-18 வரையிலான 6 ஆண்டுகளில் மட்டும் 90 லட்சம் பேர் வேலை இழந்து உள்ளதாக அஸிம் பிரேம்ஜி பல்கலைகழகம் வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 6 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு மிக மோசமான அளவில் சரிந்துள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

2011-12 ம் ஆண்டில் இந்தியா முழுவதும் மொத்தமாக 47.4 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்று இருந்தனர். அந்த எண்ணிக்கை 2017-18 ஆண்டில் 46.5 கோடியாக குறைந் துள்ளது. இந்திய வரலாற்றில் இந்த அளவிலான வேலையிழப்பு ஏற்பட்டு இருப்பது இதுவே முதன் முறை என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 6 ஆண்டு காலகட்டத்தில் சராசரி யாக ஒவ்வொரு ஆண்டும் 26 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். 2004-05 ஆண்டில் 45.9 கோடி நபர்கள் வேலைவாய்ப்பு பெற்று இருந்தனர். அந்த எண்ணிக்கை 2011-12 ஆண்டில் 47.4 கோடியாக உயர்ந்தது. இந்நிலையில் 2017- 18-ல் 46.5 கோடியாக குறைந்துள்ளது.

இந்த கால இடைவெளியில் வேளாண் தொடர்புடைய துறையில் வேலைவாய்ப்பு 49 சதவீதத்தில் இருந்து 44 சதவீதமாகவும், உற்பத்தி துறையில் 12.6 சதவீதத்தில் இருந்து 12.1 சதவீதமாகவும் குறைந் துள்ளது. இந்த காலகட்டத்தில் உற்பத்தி துறையில் 35 லட்சம் அளவில் வேலை இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

உற்பத்தி துறையில் வேலை வாய்ப்பு குறைவது மிக ஆபத்தானது. அது நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமான அளவில் பாதிக்கும் என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு உற் பத்தி துறையின் வளர்ச்சி மிக அவசியமானது.