சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ஆஸ்திரேலிய டாலர் பறிமுதல்; அதிகாரிகள் விசாரணை..!

Australian dollar seized in trichy airport : சிங்கப்பூர் நாட்டிற்கு கடத்தி கொண்டுவர முயன்ற, இந்திய மதிப்பில் ரூ 9.78 லட்சம் ஆஸ்திரேலிய டாலர் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடு உள்ளிட்ட பல நாடுகளுக்கு செல்லும் சில பயணிகள் குருவிகளாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் தங்கம் போன்ற விலைமதிப்புடைய பொருட்களை கடத்துவதை தொடர்கதையாய் கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் வந்திருந்த கமல்ஹாசன் மீண்டும் சென்னை திரும்பினார்..!

இவர்கள் திருச்சி மற்றும் சென்னை பன்னாட்டு விமான நிலையங்களில் அடிக்கடி பிடிபடுவர். தற்போது சிங்கப்பூருக்கு, ஆஸ்திரேலிய டாலரை கடத்த முயன்றவரை அதிகாரிகள் பிடித்தனர்.

இந்நிலையில், சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க :சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் தமிழர் திருநாள் கொண்டாட்டம்…!