கர்நாடகாவில் கனரா வங்கி ஏடிஎம் ஒன்றில், மக்கள் 100 ரூபாய் நோட்டை எடுக்க என்டர் செய்த போது, ரூ.500 தாள்களை வழங்கியதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ராயல் சல்யூட் வைக்கலாம் – இந்திய வம்சாவளி விஞ்ஞானிக்கு பாகிஸ்தான் பல்கலையில் மரியாதை!
பெங்களூருக்கு தென்மேற்கே 268 கி.மீ. தொலைவில் உள்ள மடிகேரி என்ற ஊரில் அமைக்கப்பட்டிருந்த கர்நாடகா கனரா வங்கியின் ஏடிஎம்மிலிருந்துதான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து குடகு காவல் கண்காளிப்பாளர் சுமன் டி. பென்னேகர் கூறுகையில், “குடகு மாவட்டத்தின் மடிகேரி நகரில் ஏடிஎம் செயலிழந்தபோது ஒரு வாடிக்கையாளர் ரூ.100 பணம் பெற முயன்ற போதெல்லாம், ஏடிஎம் தொடர்ந்து ரூ.500 நோட்டுகளையே வழங்கியது. இன்னும் சிலருக்கும் இப்படியே நடந்துள்ளது.
அந்தக் குறிப்பிட்ட ஏடிஎம் வாயிலாக பணத்தைக் கையாளும் ஏஜென்ஸியின் தவறான செயல்பாட்டினால் இச்சம்பவம் நடந்துள்ளது. ரூ.100 நோட்டுகளுக்குப் பதிலாக, ரூ.500 நோட்டுகளை நிரப்பிவிட்டது. இதனால் ரூ.1.7 லட்சத்தை மக்கள் பெற்றுச் சென்றனர்.
ரூ.500 நோட்டுகளைப் பெற்றுச் சென்றவர்களை வங்கி அடையாளம் கண்டு பணத்தை மீட்டெடுக்க முயன்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
பொங்கல் பயணம் – ஏர் கனடாவில் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?