இந்தியா வரும் பயணிகள் அரசு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு பெறலாம்..!

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் RT அல்லது PCR சோதனை சான்றிதழ் சமர்ப்பிப்பதன் மூலம் அரசு தனிமைப்படுத்தலில் (institutional quarantine) இருந்து விலக்கு பெறலாம்.

இந்த செய்தியை ஏர் இந்தியா விமான நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் லாரி மற்றும் பேருந்து மோதி விபத்து..!

பயணிகள் COVID-19 தொற்று இல்லை என்ற Negative சோதனை சான்றிதழ் சமர்ப்பித்து அரசு ஏற்பாடு செய்த தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு பெறலாம்.

பயணத்தை மேற்கொள்வதற்கும் முன்பாக, 96 மணி நேரத்திற்குள் இந்த சோதனை நடத்தப்பட்டு இருக்க வேண்டும்.

மேலும், சோதனை சான்றிதழை பரிசீலிக்க www.newdelhiairport.in என்ற இணையத்தள பக்கத்தில் பதிவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய அரசு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு வேண்டி கீழே கொடுக்கப்பட்டவர்கள் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.

1. கர்ப்பிணிப் பெண்கள்

2. குடும்பத்தில் ஏதேனும் மரணம்

3. கடுமையான நோய்

4. 10 வயதுக்குக் குறைவான குழந்தைகளுடன் பெற்றோர்கள்

5. கோவிட் -19 நெகட்டிவ் சான்றிதழ் (RT PCR பரிசோதனையை மட்டும் இணைக்கவும்).

விலக்கு கோரி விண்ணப்பிக்கப்பட்ட பின்னர், அதற்கான அனுமதி ஒப்புதல் தனிப்பட்ட குறிப்பு எண்ணுடன் விண்ணப்பதாரரின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.newdelhiairport.in/covid19

இதையும் படிங்க : சிங்கப்பூரில் TraceTogether சாதனத்தை சேதப்படுத்துவது சிறை செல்ல வழிவகுக்கும்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…