சந்தையில் நிலவும் கடுமையான போட்டி, விமான எரிபொருள் விலையேற்றம், போதிய அளவில் விமானப் பயணிகளை ஈர்க்க முடியாதது, அரசுத் துறைகளிடமிருந்து கிடைக்க வேண்டிய பாக்கித் தொகை தாமதமாவது போன்ற பல்வேறு காரணங்களால் ஏர் இந்தியா நிறுவனம், நீண்ட காலமாகவே கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. ரூ.60,000 கோடிக்கு மேல் கடன் சுமை இருப்பதால் அதனால் லாபகரமான நிறுவனமாகத் தொடர்ந்து இயங்க முடியவில்லை.
இதனால் ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. ஏர் இந்தியாவின் 100 சதவீதப் பங்குகளையும் விற்பனை செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள் விண்ணப்பிப்பதற்கான கால வரம்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லட்சம் மக்கள் திரண்ட தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு – சிறப்பு புகைப்படத் தொகுப்பு
டாடா உள்ளிட்ட சில நிறுவனங்கள் ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஏர் இந்தியா மீதான அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை அதிகரிக்கும் ஆலோசனையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 49 சதவீதம் வரையில் ஏர் இந்தியாவில் முதலீடு செய்யலாம். அந்த வரம்பு 100 சதவீதமாக உயர்த்தப்படவுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களிடையே வருமான வரி குழப்பம்! – நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
தற்போதைய நிலையில் பட்டியலிடப்பட்ட உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு மட்டுமே சில நிபந்தனைகளுடன் 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கான அனுமதியை வழங்கும்படி தொழில் துறை மேம்பாடு மற்றும் அந்நிய வர்த்தகத் துறையிடம் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவிக்கும்படி பல்வேறு அமைச்சகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் விரைவில் தனியார்மயமாகவுள்ள நிலையில், 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு அனுமதி கிடைத்தால் ஏர் இந்தியாவின் வளர்ச்சி மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Corona Virus: சீனா சென்ற வெளிநாட்டுப் பயணிகள் இந்தியா வர விசா கிடையாது – மத்திய அரசு