விமான டிக்கெட் கடனாக வழங்கமுடியாது! – ஏர் இந்தியா அதிரடி அறிவிப்பு!

Air india refuses tickets to government agency

அரசு நிறுவனங்களுக்கோ அல்லது அரசு அதிகாரிகளுக்கோ விமான டிக்கெட் கடனாக வழங்கமுடியாது என்று ஏர் இந்தியா விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு செய்துள்ளது.

கடன் சுமையின் காரணமாக கடுமையான நெருக்கடியில் இருந்து வரும் ஏர் இந்தியா நிறுவனம் இந்த அறிவிப்பை செய்துள்ளது. இது குறித்து ஏர் இந்தியா தெரிவிக்கையில் பல்வேறு அரசு அமைப்புகள் சுமார் ரூ.268 கோடிக்கு டிக்கெட் கட்டணத் தொகையை நிலுவையில் வைத்து உள்ளன என்று கூறியுள்ளது.

இந்த கடன் காரணமாக ஏர் இந்தியா நிறுவனம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. மத்திய அரசு தனியார் நிறுவனத்திடம் ஏர் இந்தியாவை விற்க உள்ளதாக ஒரு புறம் முயற்சிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த நிலுவை தொகையை செலுத்தும் வரை இனி கடனில் புதிதாக டிக்கெட் வழங்க மாட்டோம் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.