ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை… விண்ணப்பிக்குமாறு அழைப்பு!

Air India
Photo: Air India

இந்தியாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை வழங்கி வரும் விமான நிறுவனங்களில் முக்கிய பங்கை வகிக்கிறது ஏர் இந்தியா (Air India). டாடா குழுமத்திற்கு (Tata Group) சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், இந்தியாவின் சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சிங்கப்பூர், துபாய், ஷார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.

“கோழிக்கோட்டில் இருந்து ஷார்ஜாவுக்கு குறைந்தக் கட்டணத்தில் விமான சேவை”- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு!

இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு அரிய வாய்ப்பு இது. 18 வயது முதல் 22 வயதுக்குள் இருக்கும் இளம்பெண்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோல், 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஆங்கிலம் மற்றும் இந்தி சரளமாகப் பேசுபவர்களாக இருக்க வேண்டும்.

திருச்சி, மஸ்கட் இடையேயான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான சேவை- ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு வரும் ஜூன் 24- ஆம் தேதி அன்று மதியம் 02.00 மணி வரை விண்ணப்பிக்கலாம். http://airindiacareers.azurewebsites.net/ என்ற ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.