ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் ‘Cabin crew’ பணி…. இன்டர்வியூவில் பங்கேற்க பெண்களுக்கு அழைப்பு!

Photo: Air India Express Official Twitter Page

இந்தியாவில் உள்ள முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express). இந்த நிறுவனம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை வழங்கி வருகிறது. குறைந்த கட்டணத்தில் தரமான விமான சேவையை வழங்குவதால், விமானத்தைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களையே பயன்படுத்தி வருகின்றனர்.

‘திருச்சி, கோலாலம்பூர் இடையேயான மலிண்டோ ஏர் நிறுவனத்தின் விமான சேவை’- டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

இந்த நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் ‘Cabin Crew’ என்ற பணியிடங்களுக்கு வரும் ஜூன் 30- ஆம் தேதி அன்று தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ள எஸ்ஆர்எம் ஹோட்டலில் இன்டர்வியூ நடைபெறவுள்ளது. இந்த பணிக்கு பெண்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்பதால், இன்டர்வியூவில் பெண்கள் மட்டும் கலந்துக் கொள்ளலாம்.

“கோழிக்கோட்டில் இருந்து ஷார்ஜாவுக்கு ரூபாய் 8,799 கட்டணத்தில் செல்லலாம்”- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

அதேபோல், ‘Cabin Crew’ என்ற பணியிடங்களுக்கு கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள ஹாலிடே இன் கொச்சின் (Holiday Inn Cochin) என்ற ஹோட்டலில் வரும் ஜூலை மாதம் 5- ஆம் தேதி அன்று இன்டர்வியூ நடைபெறவுள்ளது. இந்த இன்டர்வியூயில் பெண்கள் மட்டும் கலந்துக் கொள்ளலாம். இது குறித்து மேலும் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.