சிங்கப்பூரில் இருந்து வந்த பயணி உட்பட 6 பேர் கோவை கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதி..!

கோயம்புத்தூர் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை வார்டில் 6 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூர், இத்தாலி, பிரான்ஸ், ஷார்ஜா ஆகிய பகுதிகளில் இருந்தும், மேலும் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்தும் வந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என பரிசோதனை நடத்தப்படுகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து தமிழகம் உடுமலை வந்த இளைஞருக்கு கொரோனா அறிகுறி..!

மேலும், 4 பேரின் ரத்த மாதிரிகள் சென்னை அனுப்பப்பட்ட நிலையில் மேலும் 2 பேரின் ரத்த மாதிரிகள் அனுப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து கடந்த சில நாள்களுக்கு முன் உடுமலையை சோ்ந்த 35 வயது இளைஞா் ஒருவர் கோயம்புத்தூர் வந்தடைந்தார்.

தற்போது அவா், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் மருத்துவ சோதனை முடிவுக்காக அவர் காத்திருக்கிறார்.

இதையும் படிங்க : COVID-19: சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உட்பட 100 விமான சேவைகள் ரத்து..!

corona virus. Corona virus tamil news, Corona virus news in tamil, corona virus tamil nadu news, கொரோனா வைரஸ், கொரோனா தமிழ் news, கொரோனா தமிழ்நாடு, coronavirus today news in tamil, coronavirus Latest news in tamil, coronavirus Tamil nadu news, coronavirus chennai news, Corona virus outbreak, corona virus pandemic, corona virus symptoms