“வந்தே பாரத் மிஷன்” என்னும் சிறப்பு திட்டம், பல்வேறு நாடுகளில் சிக்கிய இந்திய நாட்டினரை மீட்க இந்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
COVID-19 கிருமித்தொற்று காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பொதுமுடக்கத்தால் இந்தியர்கள் அதிகமானோர் வெளிநாடுகளில் சிக்கித்தவித்தனர்.
இதையும் படிங்க : சென்னை விமான நிலையத்தை புறக்கணிக்கும் தமிழக பயணிகள்…!
முதல் 5 கட்டங்களாக சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டு சொந்த நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் தமிழகத்திற்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த 5ஆம் கட்டத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 25) சிங்கப்பூர் மற்றும் அபுதாபியில் இருந்து நேற்று 300 பேர் விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தனர்.
சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (IX 1681) அன்று இரவு 7 மணிக்கு புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அவர்களுக்கு விமான நிலையத்திலேயே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்கள் உட்பட சுமார் 11.7 லட்சம் இந்தியர்கள் “வந்தே பாரத் மிஷன்” என்னும் சிறப்பு திட்டம் மூலம் இந்திய நாட்டிற்கு திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர்.
தற்போது,வந்தே பாரத் திட்டத்தின் ஆறாவது கட்டம் செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 24 வரை தொடரும் என்று இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்திருந்தார்.
சிங்கப்பூரிலிருந்து 6ஆம் கட்டமாக தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணையை சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.
இந்த 6ஆம் கட்டத்தில் திருச்சிராப்பள்ளிக்கு அதிக விமானங்கள் செல்லவிருக்கின்றன. மேலும், சென்னை மற்றும் மதுரையும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து அடுத்த மாதம் முதல் தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை..!