இந்தியாவில் தமிழகம் உட்பட 3 மாநிலங்கள் மீண்டும் விமான போக்குவரத்தை தாமதப்படுத்த காரணம் என்ன?

இந்தியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்து இன்று தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், இந்தியாவின் 3 பெரிய மாநிலங்களான மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகியவை உள்நாட்டு/வெளிநாட்டு சேவையை தாமதப்படுத்துகின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6,800 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக 6,000க்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அரசாங்கம், சுமார் 2 மாத ஊரடங்கிற்குப் பிறகு உள்நாட்டு விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டிருந்தது. ஆனால், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள், விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க இன்னும் தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளன.

அந்த மாநிலங்களில் கொரோனா இன்னும் அதிகமாகவே உள்ளது. இந்தியாவில் போக்குவரத்து அதிகமுள்ள பல விமான நிலையங்கள் அந்த 3 மாநிலங்களில்தான் அமைந்துள்ளன.

இந்தியாவில் மீண்டும் பொருளியல் நடவடிக்கைகளைத் தொடங்குவதில் மாநிலங்கள் அவற்றின் சூழலுக்கு ஏற்ப நீக்குப்போக்காக நடந்து கொள்ளலாம் என்று மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை முறியடிக்கும் நோக்கில் இந்த மாத இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.