23 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் மிஸ் இங்கிலாந்து பட்டத்தை தட்டிச்சென்றார்.!

23 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் மிஸ் இங்கிலாந்து பட்டத்தை தட்டிச்சென்றார்.

23 வயதான பாஷா முகர்ஜி என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர், தன்னுடன் போட்டிபோட்ட அனைத்து அழகிகளையும் வென்று மிஸ் இங்கிலாந்து என்ற பட்டத்தை வென்றார். இந்த தகவலை ஊடகங்கள் வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டது.

டெர்பியைச் (Derby) சேர்ந்த பாஷா முகர்ஜி (Basha Mukherjee), இரண்டு வெவ்வேறு மருத்துவ பட்டங்களை பெற்றவர். மேலும் 146 IQ கொண்டவர். அதிகாரப்பூர்வமாக ஒரு ‘மேதை’ என்று பட்டம் பெற்ற இவர் ஐந்து மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர், என்று டெய்லி மெயில் (Daily mail) பத்திரிகை தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை மாலை மிஸ் இங்கிலாந்து இறுதிப் போட்டி முடிவடைந்த சில மணி நேரங்களிலேயே, லிங்கன்ஷையரின் (Lincolnshire) பாஸ்டனில் (Boston) உள்ள ஒரு மருத்துவமனையில் ஜூனியர் டாக்டராக தனது புதிய வேலையைத் தொடங்க இருந்தார்.

மருத்துவப் பள்ளியில் படிக்கும் போதே தனது அழகி போட்டி லட்சிய வாழ்க்கை தொடங்கியதாக கூறிய முகர்ஜி, அதைச் நிகழ்த்தி காட்டுவதற்கு அவருக்கு நிறைய நம்பிக்கை இருந்தததாகவும், ஆனால் இறுதியில் தனது படிப்பை சமநிலைப்படுத்தவும், தனக்கு ஒரு இடைவெளி கொடுக்கவும் இதைச் செய்ய முடிவு செய்ததாகவும் பாஷா முகர்ஜி கூறினார்.

முகர்ஜி இந்தியாவில் பிறந்தவர், ஆனால் அவரது 9 வது வயதில் அவரும், அவரின் குடும்பத்தினரும் இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் இரண்டு இளங்கலை பட்டங்களை முடித்தவர். ஒன்று மருத்துவ அறிவியல் மற்றொன்று மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை என இரண்டு பட்டங்களை நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பெற்றவர்.

மிஸ் இங்கிலாந்து பட்டத்தை வென்றதால், அவர் உலக அழகி போட்டியில் நுழைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மொரீஷியஷில் (Mauritius) தனது விடுமுறையை கழிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.