சென்னை விமான நிலையம் வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி..!

அமெரிக்காவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் இந்த நாவல் கொரோனா வைரஸ், தமிழகத்தில் அதன் பயத்தை காட்ட தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 106065 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பலி எண்ணிக்கை 3600 என ஊடகங்கள் பதிவுசெய்கின்றன.

இந்தியா நாட்டை பொறுத்தவரை 34 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது. தமிழகத்திலும் முதல் சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய பயணிகள் அனைவருக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில், அந்த சிறுவனுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது.

கூடுதல் தகவலாக இந்த சிறுவன் நேரடியாக அமெரிக்காவில் இருந்து சென்னை விமான நிலையம் வரவில்லை.

இந்த விமானம் அமெரிக்காவில் இருந்து கத்தாரில் உள்ள தோஹா விமான நிலையத்திற்கு சென்றுள்ளது. அங்கு சில பயணிகளை ஏற்றிக்கொண்டு அதன்பின் சென்னை வந்துள்ளது.

கத்தார் நாட்டிலும் கொரோனா பாதிக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : Tamilnadu medias