COVID-19: சிங்கப்பூரில் வேலை அனுமதி (Work Pass) பெற்ற இந்தியர் ஒருவர் பாதிப்பு..!

சிங்கப்பூரில் புதிதாக 13 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 13) உறுதிப்படுத்தப்பட்டது.

இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது.

மேலும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக மேலும் 13 பேருக்கு COVID-19 உறுதி; மொத்த சம்பவம் 200ஆக உயர்வு..!

இந்தியர் பாதிப்பு

இதில் 189வது சம்பவமாக பதிவுசெய்யப்பட்ட நபர், சிங்கப்பூர் வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் 36 வயதான இந்திய நாட்டு ஆடவர்.

இவர் பிப்ரவரி 21 முதல் மார்ச் 1 வரை இந்தியாவில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இவர் தொற்று நோய்களுக்கான தேசிய மையத்தில் (NCID) தனிமையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் மார்ச் 11 அன்று நோய்க்கான அறிகுறிகள் தெரியவந்ததை அடுத்து, மார்ச் 12 அன்று GP கிளினிக்கிற்கு சிகிச்சைக்கு சென்றார்.

அதை தொடர்ந்து, அதே நாளில் அவர் NCID-க்கு பரிந்துரைக்கப்பட்டார், அன்றைய பிற்பகலில் COVID-19 தொற்று உறுதிசெய்யப்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக செல்வதற்கு முன்பு, அவர் சுமிட்டோமோ மிட்சுய் வங்கிக்கு (Sumitomo Mitsui Banking Corporation) வேலைக்குச் சென்றிருந்தார்.

கூடுதலாக அவர் செயின்ட் ஜார்ஜ் சாலையில் (St George’s Road) வசித்து வந்தாக CNA குறிப்பிட்டுள்ளது.

Source : CNA

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; அனைத்து விசாக்களையும் ரத்து செய்தது இந்தியா..!