சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு வரும் விமானம் உட்பட சென்னையில் ஒரே நாளில் 118 விமானங்கள் ரத்து..!

கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும் வீட்டிலேயே இருக்கும்படி சுகாதார நிபுணர்கள் ஆலோசனை வழங்குவதால் பெரும்பாலானோர் வெளியில் செல்வதில்லை, வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் நேற்று ஒரேநாளில் மட்டும் 118 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க : ஒரே ஒரு பயணியுடன் சிங்கப்பூரில் இருந்து சென்னை சென்ற டைகர் ஏர்வேஸ் விமானம்..!

கொரோனா வைரஸ் பீதி காரணமாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் சென்னை சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், தோஹா, பக்ரைன், ஜெர்மன், ஹாங்காங், ஷார்ஜா, மொரீசியஸ் ஆகிய பகுதிகளில் இருந்து தலா ஒரு விமானம் என 29 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன .

அதே போல், மலேசியாவில் இருந்து 6 விமானங்கள், இலங்கையில் இருந்து 6, குவைத்தில் இருந்து 3, மஸ்கட்டில் இருந்து 3, துபாய், தாய்லாந்தில் இருந்து தலா 2 விமானங்கள் மற்றும் சென்னையில் இருந்து மேற்கண்ட நாடுகளுக்கு செல்லும் 29 விமானங்கள் என 58 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மேலும், போதிய பயணிகள் இல்லாமல் சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் 6 விமானங்கள், டெல்லிக்கு 5, மும்பைக்கு 4 மற்றும் மதுரை, ஐதராபாத், கோவை செல்லும் தலா 2 விமானங்கள், கொச்சி, கோவா, கொல்கத்தா, தூத்துக்குடி, ஷீரடி, புனே, திருவனந்தபுரம், மங்களூரு, திருச்சி ஆகிய இடங்களுக்கு செல்லும் தலா 1 விமானம் என மொத்தம் 30 விமானங்களும், இந்த நகரங்களிலிருந்து சென்னைக்கு வரும் 30 விமானங்களும் என மொத்தம் 60 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் நேற்று ஒரேநாளில் 118 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதையும் படிங்க : COVID-19: வேலை அனுமதி அட்டை உடையவர்கள் கவனத்திற்கு – மனிதவள அமைச்சகம்..!

corona virus. Corona virus tamil news, Corona virus news in tamil, corona virus tamil nadu news, கொரோனா வைரஸ், கொரோனா தமிழ் news, கொரோனா தமிழ்நாடு, coronavirus today news in tamil, coronavirus Latest news in tamil, coronavirus Tamil nadu news, coronavirus chennai news, Corona virus outbreak, corona virus pandemic, corona virus symptoms