சிங்கப்பூர் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 11.7 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்..!

வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்கள் உட்பட சுமார் 11.7 லட்சம் இந்தியர்கள் “வந்தே பாரத் மிஷன்” என்னும் சிறப்பு திட்டம் மூலம் இந்திய நாட்டிற்கு திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர்.

COVID-19 கிருமித்தொற்று காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பொதுமுடக்கத்தால் இந்தியர்கள் அதிகமானோர் வெளிநாடுகளில் சிக்கித்தவித்தனர்.

இதையும் படிங்க : பயணிகளுக்கு தவறுதலான மின்னஞ்சல் – மன்னிப்பு கேட்ட ஸ்கூட் நிறுவனம்..!

இந்நிலையில், வந்தேபாரத் திட்டத்தின் ஆறாவது கட்டம் செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 24 வரை தொடரும் என்று இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதில் கடந்த ஆகஸ்டு 1 அன்று தொடங்கிய 5வது கட்டம் இந்த மாத இறுதியோடு முடிவடையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 11.70 லட்சம் இந்தியர்கள் கடந்த மே 6-ல் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். அதே போல், இந்தியாவில் சிக்கித் தவித்த 1.66 லட்சம் மற்ற நாட்டு குடிமக்கள் அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

கடந்த ஜூன் 10 முதல் ஜூன் 22 வரை, மூன்றாம் கட்டத்தில் சுமார் 130 விமானங்கள் இயக்கப்பட்டன. அதில் சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்.

ஆறாவது கட்டமாக, வரும் செப்டம்பர் 2 மற்றும் 3 அன்று விமானங்கள் இயக்கப்படும். அந்நாட்களில் சிங்கப்பூரில் இருந்து மாலை 7 மணிக்கு புறப்படும் இந்த விமானம், திருச்சிராப்பள்ளியை இரவு 8.45 மணிக்கு வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளியைத் தவிர, சென்னை, மதுரை, ஹைதரபாத், விஜயவாடா, பெங்களூரு, கொச்சி ஆகிய நகரங்களுக்கும் சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்குகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து அடுத்த மாதம் முதல் தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg