கோடீஸ்வரி நிகழ்ச்சியில் முதன் முறையாக 1 கோடி வென்ற மாற்றுத்திறனாளி பெண்

kodeeswari 1 crore winner: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் முதல் முறையாக மாற்று திறனாளி பெண் ஒருவர், 1 கோடி ரூபாய் பரிசு வென்று சாதனை படைத்துள்ளார்.

நாகர்கோவிலைச் சேர்ந்த கௌசல்யாவால் வாய் பேசமுடியாது, காது கேட்காது. இந்த குறைகளை கடந்து தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபிப்பதற்காக கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் கோடீஸ்வரி போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

சென்னை வந்து செல்லும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு – மத்திய அரசு

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கௌசல்யா தற்போது 1 கோடி ரூபாய் வென்றது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். நீதிமன்றம் ஒன்றில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வரும் அவர் குரூப் 1 தேர்வு எழுதி உதவி ஆட்சியராக வேண்டும் என்பதே ஆசை என்று கூறுகிறார்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ராதிகா சரத்குமார், இந்நிகழ்ச்சி பெண்களின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்ற ஒரு தளமாக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் வர்த்தக பிரிவு தலைவர் அனுப் சந்திரசேகரன் இது பெண்கள் அனைவருக்கும் பெருமையான தருணம் என்று தெரிவித்துள்ளார்.

இயக்குனர் இல்லாமல் இயங்கும் மதுரை விமான நிலையம் – பயணிகள் ஏமாற்றம்