உஷார் நிலையில் சென்னை ஏர்போர்ட் – ஒரே நாளில் 1.2 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்

Chennai airport
Chennai airport

சென்னை விமான நிலையத்தில், ஒரே நாளில் 1.2 கோடி மதிப்பு தங்கம், வெளிநாட்டு பணம், எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூரில் இருந்து ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்றுமுன்தினம் அதிகாலை 2.30 மணிக்கு விமான நிலையத்துக்கு வந்தது. அதில் சிங்கப்பூரை சேர்ந்த தேவி (40) என்ற பெண் வந்தார்.

அவரை சுங்க அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது உள்ஆடையில் நாப்கினில் தங்க கட்டிகள் இருந்தது. அதன் எடை 300 கிராம். அதன் மதிப்பு 12.31 லட்சம். எனவே அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். அதே விமானத்தில் சென்னையை சேர்ந்த ரவி (41) சுற்றுலா பயணியாக சென்றுவிட்டு வந்திருந்தார். அவர் ஜீன்ஸ் பேண்ட், பெல்ட் போடும் இடத்தில் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தார். அதன் எடை 320 கிராம். அதன் சர்வதேச மதிப்பு 12.86 லட்சம். எனவே அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

ஜப்பான் கப்பல் அப்டேட் : 5 தமிழர்களும் நலம், நிம்மதி அளித்த வாட்ஸ் அப் வீடியோ

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3.15 மணிக்கு இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் ராமநாதபுரத்தை சேர்ந்த ராஷக் காலி (30) என்பவர் ஆசனவாயில் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தார். அதன் எடை 434 கிராம். அதன் மதிப்பு 17.76 லட்சம்.

எனவே அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். அதேபோல் நேற்று காலை சார்ஜாவில் இருந்து ஏர் இண்டியா விமானத்தில் பீகாரை சேர்ந்த சிரஜ்குமார் (34) வந்திருந்தார். அவரிடம் நடத்திய சோதனையில் 920 கிராம் தங்க கட்டிகள் இருந்தன. அதன் மதிப்பு ₹35 லட்சம். எனவே அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் துபாயில் இருந்து எமரேட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு வந்தது. அதில் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த பஷீர் சையத் (24) என்பவர் 2 வெளிநாட்டு செல்போன்கள், டிவி, வாட்ச்கள், இயர்போன் கொண்டு வந்திருந்தார். அதன் மதிப்பு 24.14 லட்சம். அவரிடம் உரிய ரசீது இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு 9. 30 மணிக்கு சார்ஜாவில் இருந்து ஏர் இண்டியா விமானத்தில் சுற்றுலா விசாவில் பயணம் செய்ய ராமநாதபுரத்தை சேர்ந்த ஆசீத் திப்பிலி (25) சார்ஜா செல்ல வந்திருந்தார். அவரது உள் ஆடையில் வெளிநாட்டு பணம் இருந்தது. அதன் இந்திய மதிப்பு 7.36 லட்சம். எனவே அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

திருச்சியில் இருந்து அபுதாபி, தோகாவுக்கு வாரத்தில் 4 நாட்கள் விமான சேவை!