ஒன்ராரியோ மாகாணத்தில் 2.2 பில்லியன் டாலர்கள் செலவினம் – வருவாய் குறித்து நிதி அமைச்சர் பீட்டர் தகவல்

வலுவான பொருளாதார வளர்ச்சி:

ஒன்ராரியோ மாகாணத்தில் தினசரி covid-19 வைரஸ் தொற்றுக்கள் பதிவாகி வருகின்றன. Covid-19 கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு தடுப்பூசி மருந்துகள் விநியோகிக்கப்படுகின்றன. Covid-19 வைரஸ் தொற்றின் தீவிர மாறுபாடுகள் குறித்த நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் ஒன்றாரியோ மாகாணத்தில் covid-19 செலவினங்களுக்காக 2.2 பில்லியன் டாலர் செலுத்தப்படுகிறது.

மாகாணத்தின் நிதியமைச்சர் பீட்டர் மாகாணத்திற்கான 2021-2022 காலாண்டு நிதியை இன்று வெளியிட்டார். நோய்தொற்று எதிர்காலத்தில் தீவிரமடைந்தால் அதனை எதிர்த்து போராடுவதற்கு தேவையான வளங்கள் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியம் என்று கூறினார்.

வருவாய் கணிப்புகள் பட்ஜெட்டைவிட 2.9 பில்லியன் டாலர்கள் அதிகம். இதற்கு காரணம் மத்திய அரசாங்கத்திடமிருந்து அதிக இடமாற்றங்கள் மற்றும் வலிமையான பொருளாதார வளர்ச்சி என்று குறிப்பிடப்படுகிறது.

வருவாய் அதிகரிப்பு :

நிதித்துறை அமைச்சர் பீட்டர் 2.2 பில்லியன் டாலர் செலவுகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை. மக்களின் தேவை மற்றும் உடல் நலத்திற்கு ஏற்ப நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு இது பயன்படும் என்று கூறினார்.

பெரிய நிறுவனங்களின் வரிகள் மற்றும் நில பரிமாற்ற வரிகள் போன்றவற்றிலிருந்து கிட்டதட்ட ஒரு பில்லியன் டாலர்களும் மத்திய அரசாங்கத்தில் இருந்து 1.9 பில்லியன் டாலர்களும் அதிகரித்துள்ள வருவாயில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணத்தில் பற்றாக்குறைக்கான திட்டத்தில் 42.4 பில்லியன் டாலர்களில் இருந்து நிதி குறைக்கப்பட்டு 700 மில்லியன் டாலர்களாக திருத்தப்படுகிறது

Covid-19 தீவிரத்தை எதிர்கொள்வதற்கு பொருளாதார நிலையை திறம்பட கையாள வேண்டும். வைரஸ் தொற்றின் நிலையை கட்டுப்படுத்துவதற்கு செலவினம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது